தயாநிதி வழக்கு கோவை டு சென்னை மாறியது ஏன்? | Dayanidhi Maran | DMK | DMK MP
2020ல் திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன், டிஆர்பாலு, தமிழச்சி தங்கபாண்டியன் இணைந்து தலைமை செயலகத்தில் பேட்டி அளித்தனர். தயாநிதிமாறன் பேசுகையில், கொரோனா நிவாரண நிகழ்ச்சி தொடர்பாக மனு அளிக்க சென்றபோது அப்போதைய முதன்மை செயலர் சண்முகம் உரிய மரியாதை இல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களை போன்று நடத்தியதாக கூறினார். இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எம்பி தயாநிதி மாறன், தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தியதாக கோவையை சேர்ந்த ஜெகநாதன் புகார் அளித்தார். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தயாநிதி மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கோவை B3 போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதியப்பட்டது.
ஜூலை 24, 2024