/ தினமலர் டிவி
/ பொது
/ காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னைக்கும் அலர்ட்! | Deep Depression | Rain Alert | IMD | Cyclone
காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னைக்கும் அலர்ட்! | Deep Depression | Rain Alert | IMD | Cyclone
தென்கிழக்கு வங்க கடலில் 2 நாட்களாக நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள், மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. காலை 9 மணி நிலவரப்படி இலங்கை திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 340 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 630 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 750, சென்னையிலிருந்து 830 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
நவ 26, 2024