உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா கூட உதவி செய்யுது: வெறுத்துப்போன பாக் மக்கள் Defence Minister Khawaja Asif bizarre remark

இந்தியா கூட உதவி செய்யுது: வெறுத்துப்போன பாக் மக்கள் Defence Minister Khawaja Asif bizarre remark

பாகிஸ்தான் முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு பலத்த மழை பெய்து வருவதால் அந்நாட்டு மக்கள் கடும் துயரத்தில் உள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கி 800க்கு மேற்பட்டவர்கள் இதுவரை பலியாகிவிட்டனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. அங்கு 25 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கியிருக்கின்றன. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால், 8 லட்சம் பேர் உடைமைகளை போட்டுவிட்டு உயிர் தப்பினால் போதும் என பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். பாகிஸ்தான் மக்கள் படும் துயரத்தை கண்டு இந்தியா தன்னாலான உதவியை செய்திருக்கிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ள நிலையிலும் கூட, தாவி, சட்லஜ் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்து உதவியது. தாவி நதியில் வெள்ளப்பெருக்கு வரப்போகிறது என கடந்த வாரம் 3 முறையும், சட்லஜ் நதியில் வெள்ளம் வரப்போகிறது என நேற்றும் இப்படியாக 4 முறை பாகிஸ்தானை எச்சரித்து அந்நாட்டு மக்களை இந்தியா வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற்றியிருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிஃப் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் விசித்திரமான கருத்தை சொல்லி அந்நாட்டு மக்களை கடுப்பேற்றியிருக்கிறார். வெள்ளம் தேங்கி நிற்கிறது என கூறி போராட்டம் நடத்துபவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வெள்ள நீரை ஆசீர்வாதமாக பார்க்க வேண்டும். வெள்ளநீரை வடிந்து செல்ல விடாமல் வீட்டில் சேமிக்க வேண்டும். பக்கெட்டுகளிலும், தொட்டிகளிலும் வெள்ளநீரை சேமித்து வைக்க வேண்டும். என கவாஜா ஆசிஃப் கூறினார். வெள்ளத்தால் வீடுகளை விட்டு வெளியேறி சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலையில், வெள்ளத்தை ஆசீர்வாதமாக பார்க்க வேண்டும் என, கவாஜா ஆசிஃப் கூறியது அந்நாட்டு மக்களை எரிச்சல் படுத்தியிருக்கிறது. இந்தியா கூட நமக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுத்து நன்மை செய்கிறது. ஆனால், நாட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்புள்ள ராணுவ அமைச்சர் இப்படி முட்டாள்தனமாக பேசிக்கொண்டிருக்கிறாரே.. இதுபோன்ற நபர்களிடம் சிக்கி நம் நாடு என்ன ஆகப்போகிறதோ? என பாகிஸ்தான் மக்களும் எதிர்கட்சி தலைவர்களும் கோபத்தை வெளிக்காட்டுகின்றனர். கவாஜா ஆசிப் ஏறுக்கு மாறாக பேசுவது இது முதல் முறையல்ல. இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் 4 நாள் போர் நடந்தபோது, 5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கவாஜா ஆசிஃப் பெருமையடித்துக் கொண்டார். ஆதாரங்கள் எங்கே என சிஎன்என் நிருபர் கேட்டதற்கு சோசியல் மீடியாவுல பாருங்க என்றார். நான் பாகிஸ்தான் சோசியல் மீடியாவை சொல்லல. இந்தியாவின் சோசியல் மீடியாவை பாருங்க.. நிறைய போட்டோ ஆதாரங்கள் இருக்கு என கூறி, கேள்வி கேட்ட நிருபரையே கிறுகிறுக்க வைத்தார், கவாஜா ஆசிஃப். பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்குவதற்காக இந்தியா ஏவிய ட்ரோன்களை பாகிஸ்தான் ஏன் இடைமறித்து தாக்கவில்லை என பார்லிமென்ட்டில் ஒரு விசித்திரமான விளக்கத்தை கவாஜா ஆசிப் கூறியிருந்தார். இந்திய ட்ரோன்களை நாம் இடைமறித்து தாக்கினால் நமது ராணுவ தளங்கள் இருக்கும் இடங்களை இந்தியா கண்டுபிடித்து விடும். அதனால்தான் இடைமறிக்கவில்லை என அவர் கூறினார். புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து கவாஜா ஆசிப் கூறும் கருத்துக்கள், மிகப்பெரிய ஜோக்காகவும் கோமாளித்தனமான விஷயமாகவும்தான் முடிகிறது என பாகிஸ்தான் மக்களே தலையில் அடித்துக் கொள்கின்றனர். #DefenceMinister #KhawajaAsif #BizarreRemark #Flood #PakistanFloods #800DiesInPakistan #IndiaPakistanWar #IndusWaterTreaty #TawiRiver #SutlejRiver #FloodRelief #WaterManagement #ClimateCrisis #PakIndiaRelations #FloodDisaster #HumanitarianCrisis #RiverManagement #NaturalCalamity #WaterRights #CrisisResponse

செப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை