உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராணுவ தளவாட உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை: ராஜ்நாத் சிங்

ராணுவ தளவாட உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை: ராஜ்நாத் சிங்

பெங்களூரு எலஹங்காவில் நடந்து வரும் ஏரோ இந்தியா கண்காட்சியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட பலவகை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. கண்காட்சியையொட்டி, இரண்டாம் நாளில், ரபேல், தேஜஸ், சுகோய் வகை போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது. கண்காட்சியில் 150 வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இன்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் 30 நாடுகளின் ராணுவ அமைச்சர்களும், 90 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், டிஆர்டிஓ சார்பில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்கள், தனியார் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள அதி நவீன ட்ரோன் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன. ஏரோ இந்தியா 2025 நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைத்து நாடுகளின் ராணுவ அமைச்சர்கள், பிரதிநிதிகளை ராஜ்நாத் சிங் வரவேற்று பேசினார். பாதுகாப்பு துறையில் இந்தியாவின் திட்டங்கள் குறித்து விளக்கினார்.

பிப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி