முப்படைகளும் இணைந்து எந்த தாக்குதலையும் எதிர் கொள்ள தயார்! Defence officers explanation
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும், தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு நம் முப்படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்த படைகளின் சார்பில் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட பதிலடி குறித்து, முப்படைகளின் அதிகாரிகள் விளக்கினர். விமானப்படை அதிகாரி ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி, ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் ராஜிவ் காய், கடற்படை அதிகாரி வைஸ் அட்மிரடல் ஏ.என்.பிரமோத் ஆகியோர் கூட்டாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தனர். பஹல்காமில் பாக் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் தான் பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய படை தாக்குதல் நடத்தியது. அதுவும் பயங்கரவாதிகளை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தினோம். இதை தெளிவுபடுத்திய பிறகும் பாக். ராணுவம் நம் மீது தாக்குதல் நடத்தியது. பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை பாக் ராணுவம் தங்கள் மீதான தாக்குதலாக கருதியது. நாம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை. ஆனால், பாகிஸ்தான் நம் குடியிருப்பு பகுதிளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது. பாகிஸ்தான் நடத்திய அனைத்து ட்ரோன்கள், ஏவுகணைகள் வானிலேயே அழிக்கப்பட்டன. அவை இந்திய எல்லையை நெருங்கக் கூட முடியாது.