உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பயங்கரவாத ஒழிப்பு போர்: இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவுIndian delegation meeting with Jappan Delegates

பயங்கரவாத ஒழிப்பு போர்: இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவுIndian delegation meeting with Jappan Delegates

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை குறித்து விளக்கவும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் முகத்திரையை கிழிக்கவும் அனைத்து கட்சி எம்பிக்கள் அடங்கிய குழு வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. ஐக்கிய ஜனதாதளம் எம்பி சஞ்சய் ஷா தலைமையிலான எம்பிக்கள் குழுவினர் இன்று ஜப்பான் நாட்டிற்கு சென்று, அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த குழுவில் பாஜ எம்பிக்கள் அபராஜிதா சாரங்கி, பிரிஜ் லால், திரிணமுல் எம்பி அபிஷேக் பானர்ஜி, மார்க்சிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டாஸ் மற்றும் காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். டோக்கியோவில் ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தகேஷி இவாயா மற்றும் அந்நாட்டு பிரதிநிதிகளை சந்தித்த நம் எம்பிக்கள் குழு, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், அதைத் தொடர்ந்த இந்தியாவின் நடவடிக்கைகளை விளக்கினர்.

மே 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை