டில்லி சம்பவத்தால் அஜித் தோவலே இறங்கிய பரபரப்பு delhi airport tech issue|delhi blast | ajit dowal
இந்தியாவின் மிகப்பெரிய ஏர்போர்ட்களில் முக்கியமானது டில்லி சர்வதேச விமான நிலையம். தினமும் 1,500 விமானங்கள் வரை வந்து செல்கின்றன. கடந்த வாரம் டில்லி விமான நிலையத்தில் தரையிறங்க விமானங்கள் வழக்கம் போல தரைக்கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டன. ஆனால், விமானிகளுக்கு கிடைத்த ஜிபிஎஸ் தகவல்கள் வான்வழியை தவறாக காட்டியதால், அவர்கள் குழம்பினர். விமானத்தின் நிலை, நிலப்பரப்பு குறித்த எச்சரிக்கை தகவல்களும் வழக்கத்துக்கு மாறாக இருந்தன. குறிப்பாக டில்லியில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தொலைவு வரை வான்வழியை குழப்பமாக மாற்றி காட்டும் ஜிபிஎஸ் தகவல்களே கிடைத்ததாக விமானிகள் புகார் அளித்தனர். ஜிபிஎஸ் தரவுகளில் ஏற்பட்ட இந்த குளறுபடியால் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டில் பெரும் இடையூறு ஏற்பட்டது. 800க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தரையி இறங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டதால், பல விமானங்கள் அருகில் உள்ள ஜெய்ப்பூர் மற்றும் லக்னோ விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் விமான பயணியர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். தானியங்கி ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட இடையூறுகளால் தரை கட்டுப்பாட்டு மையம், பழைய முறைப்படி மேனுவலாக பணியாற்றும் முறைக்கு தள்ளப்பட்டது. இதற்கிடையே நடந்த டில்லி செங்கோட்டை அருகே நடந்த பயங்கரவாத தாக்குதல் இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. உண்மையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான குளறுபடி நிகழ்ந்ததா அல்லது சைபர் தாக்குதலா இல்லை நம் விமானப் போக்குவரத்து கட்டுப்பாடுகளை, ஹைஜாக் செய்வதற்கான சதியா? என பல கோணங்களில் விசாரணை துவங்கி உள்ளது.