உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பழைய வாகனங்களை கண்டுபிடிக்க வைக்கப்படும் பிரத்யேக கருவி | Delhi Bans Petrol for Old Vehicles

பழைய வாகனங்களை கண்டுபிடிக்க வைக்கப்படும் பிரத்யேக கருவி | Delhi Bans Petrol for Old Vehicles

15 ஆண்டுகள் ஆகிவிட்டதா? இனி பெட்ரோல் கிடையாது! காற்று மாசை குறைக்க அதிரடி நடவடிக்கை டிஸ்க்: பழைய வாகனங்களை கண்டுபிடிக்க வைக்கப்படும் பிரத்யேக கருவி டெல்லியில் காற்று மாசுவை குறைப்பது தொடர்பாக, சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிஸ்ரா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின் பேட்டி அளித்த அவர், வாகன புகை மாசுவை கட்டுப்படுத்த அரசு கடும் நடவடிக்கை எடுக்க இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களுக்கு இனி பெட்ரோல் வழங்கப்படாது. பழைய வாகனங்களை அடையாளம் காண, பெட்ரோல் பங்கில் பிரத்யேக கருவி பொருத்தப்படும். இந்த விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த சிறப்பு குழு அமைக்கப்படும். வெளியில் இருந்து டெல்லிக்குள் நுழையும் வாகனங்கள் சுற்றுச்சூழல் தர அளவுகோள்களை பூர்த்தி செய்திருக்க வேண்டும். பெரிய ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், கட்டுமானம் நடைபெறும் இடங்களில் தண்ணீரை பயன்படுத்தி காற்று மாசை குறைக்கும் இயந்திரங்கள் நிறுவுவது கட்டாயம் ஆக்கப்படும். டெல்லியில் பொது போக்குவரத்துக்காக உள்ள பஸ்களில் 90 சதவீதம் இந்தாண்டு இறுதிக்குள் மின்சார பஸ்களாக மாற்றப்படும் என டெல்லி அமைச்சர் மஞ்சிந்தர் சிங் தெரிவித்தார். டெல்லியில் ஏற்கனவே, 10 ஆண்டுகள் ஆன டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகள் ஆன பெட்ரோல் வாகனங்கள் இயக்க தடை உள்ளது. இந்த விதியை மீறுபவர்களின் வாகனங்கள் கண்டறியப்பட்டால் 2022 முதல் பறிமுதல் செய்யப்பட்டு அவை மறு சுழற்சிக்கு அனுப்பப்படுகிறது.

மார் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ