டில்லியில் முக்கிய குற்றவாளி கைது-பரபரப்பு தகவல் | delhi car blast | umar nabi | NIA | Delhi blast
டில்லி செங்கோட்டை அருகே நடந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கிப்போட்டுள்ளது. வெடிகுண்டு நிரப்பிய காரை எடுத்து சென்று வெடிக்க செய்த பயங்கரவாதி உமர் உன் நபியும் இந்த தாக்குதலில் இறந்து விட்டான். அவன் ஒரு டாக்டர். அவனுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டியவர்களும் டாக்டர்கள் தான். இதுவரை 7-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தான், ஒயிட் காலர் பயங்கரவாதிகளை வைத்து இந்த கொடிய தாக்குதலை நடத்தியது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் தாக்குதல் நடத்திய உமரின் முக்கிய கூட்டாளியை இப்போது என்ஐஏ கைது செய்திருக்கிறது. அவன் தான் உமருக்கு கார் வாங்கி கொடுத்துள்ளான். இந்த கைது பற்றியும், சம்பவம் தொடர்பாக இதுவரை நடந்த விசாரணை பற்றியும் முக்கிய தகவல்களை என்ஐஏ வெளியிட்டுள்ளது. #DelhiRedFortCarBlast #MasoodAzhar #ANFO #INDvsPAK #DelhiBlast #Terrorism #SecurityConcerns #LiveUpdates #NationalSecurity #CurrentEvents #BreakingNews #PoliticalTension #PublicSafety #NewsReport #InvestigativeJournalism #SafetyMeasures #CounterTerrorism #BombThreat #CrisisManagement