டில்லியில் ஹமாஸ் பாணி குண்டு வீச்சு-பகீர் தகவல் delhi car blast | umar un nabi | NIA | hamas attack
டில்லி செங்கோட்டை அருகே நடந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கிப்போட்டது. வெடிகுண்டு நிரப்பிய காரை எடுத்து சென்று வெடிக்க செய்த பயங்கரவாதி உமர் உன் நபியும் இந்த தாக்குதலில் இறந்து விட்டான். அவன் ஒரு டாக்டர். அவனுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டியவர்களும் டாக்டர்கள் தான். இதுவரை டாக்டர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச பயங்கரவாதியான மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தான், ஒயிட் காலர் பயங்கரவாதிகளை வைத்து இந்த கொடிய தாக்குதலை நடத்தியது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் முக்கிய திருப்பமாக உமர் நபியின் கூட்டாளிகள் அமீர் ரஷித் அலி, ஜசிர் பிலால் வானி ஆகியோரை என்ஐஏ கைது செய்தது. 2 பேருமே காஷ்மீரை சேர்ந்தவர்கள். குண்டு வெடிப்புக்கு பயன்படுத்திய காரை உமர் நபிக்கு ரஷித் அலி தான் வாங்கி கொடுத்து இருந்தான். அதே நேரம் ஜசிர் பிலால் வானி தொழில்நுட்ப உதவிகளை வழங்கி இருக்கிறான். ஜசிர் பிலால் வானியிடம் என்ஐஏ விசாரித்த போது, அவன் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தான் #DelhiRedFortCarBlast #MasoodAzhar #ANFO #INDvsPAK #DelhiBlast #Terrorism #SecurityConcerns #LiveUpdates #NationalSecurity #CurrentEvents #BreakingNews #PoliticalTension #PublicSafety #NewsReport #InvestigativeJournalism #SafetyMeasures #CounterTerrorism #BombThreat #CrisisManagement