உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாஜ தலைமையிலான அரசு பதவி ஏற்பது எப்போது? delhi election| bjp to form government|

பாஜ தலைமையிலான அரசு பதவி ஏற்பது எப்போது? delhi election| bjp to form government|

டில்லி சட்டசபை தேர்தலில் 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்தது ஆம் ஆத்மி. முதல்வர் ஆதிஷி இன்று கவனர் சக்ஸேனாவை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். அதை ஏற்ற கவர்னர், டெல்லி சட்டசபையை கலைத்தார். 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜ, ஆட்சி அமைக்க உரிமை கோரும். அந்த கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் யார் என்பது தேர்வு செய்யப்பட்டு கவர்னருக்கு பரிந்துரைக்கப்படுவார். பிரதமர் மோடி 12, 13 தேதிகளில் அமெரிக்கா செல்ல உள்ளதால், அவர் திரும்பிய வந்த பின் பதவியேற்பு விழா நடக்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையே, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவி, ஆதிஷிக்கு தான் கொடுக்கப்பட வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் ஆம் ஆத்மி தலைமையை வலியுறுத்தி வருகின்றனர். டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியை சேர்ந்த மூத்த தலைவர்கள் கெஜ்ரிவால், சிசோடியா உள்ளிட்டோர் மண்ணை கவ்விய நிலையில், ஆதிஷி வெற்றி பெற்றதன் மூலம், கட்சியில் அவரது செல்வாக்கு உயர்ந்துள்ளது.

பிப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ