உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டில்லி குண்டு வெடிப்பு வழக்கு: அரியானாவில் 2 டாக்டர்கள் கைது

டில்லி குண்டு வெடிப்பு வழக்கு: அரியானாவில் 2 டாக்டர்கள் கைது

டில்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலை ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த டாக்டர்களே கூட்டாக திட்டம் தீட்டி செய்து முடித்தது விசாரணையில் தெரிய வந்தது. உயிரை காக்க வேண்டிய டாக்டர்களே யாருக்கும் சந்தேகம் வராதபடிக்கு மருத்துவமனைகளில் பயங்கரவாதிகளாக உலா வந்தார்களா? என நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். டில்லி தாக்குதல் சம்பவத்தில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர்கள் ஆதில் அகமது, உமர் நபி முகமது, முசாமீல் ஷகீல் மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த டாக்டர் ஷாஹீன் சயீத் ஆகியோர் மூளையாக இருந்து செயல்பட்டது தெரிய வந்தது. இவர்களில் டாக்டர் உமர் நபி தான் வெடிபொருட்கள் நிரம்பிய காரை செங்கோட்டை அருகே ஓட்டிச் சென்று வெடிக்கச் செய்தார் என்பது டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதியானது. உமர் நபி, முசாமீல் ஷகீல், ஷாஹீன் சயீத் மூவரும் டில்லி அருகே பரீதாபாத்தில் உள்ள அல் ஃபலா மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டர்களாக வேலை பார்த்து வந்தனர். #DelhiPolice #AlFalahUniversity #DrUmarNabi #RedFortBlast #Mohammad #Mustakim #DrMuzammilGanaie #DrShaheenSayeed #ArrestNews #DelhiCrime #MedicalProfessionals #JusticeForVictims

நவ 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி