உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக போராட்டம்; மம்தா, கெஜ்ரிவால் கைது | Delhi Protest | Mamata Arrest

தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக போராட்டம்; மம்தா, கெஜ்ரிவால் கைது | Delhi Protest | Mamata Arrest

எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும், அவர் பதவி விலக வலியுறுத்தியும் டில்லியில் இண்டி கூட்டணி கட்சிகள் 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும் இன்று போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதனால் டில்லி ஜந்தர் மந்தரில் 25 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். கிரிமினல் குற்றப்பின்னணி கொண்ட சிஜேபி அமைப்பினர் 50 பேர் உட்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் இருந்து விமானத்தில் டில்லிக்கு வந்த சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே, நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அஷூதோஷ் ரங்கா ஆகியோர் விமானத்தில் வைத்தே கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இதே கோரிக்கையை வலியுறுத்தி டில்லி சவுத் அவென்யூ பகுதியில், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா, திரிணமுல் காங்கிரஸ் எம்பிக்கள் டெரிக் ஓ பிரையன், டோலா சென் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். ஜந்தர் மந்தர் நோக்கி பேரணி செல்ல முயன்ற டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினரும் கைது செய்யப்பட்டனர். கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலர் எம்.ஏ.பேபி, தமிழக மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் உள்ளிடோரையும் போலீசார் கைது செய்தனர். மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தால் டில்லி முழுதும் பரபரப்பாக காணப்படுகிறது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்திய இளைஞர்களே, உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். #DelhiPolice #ProtestAgainstCEC #MamataArrest #KejriwalDetained #DelhiProtest #Stalin #RahulGandhi #PinarayiVijayan #MABaby #SocialProtest #PoliticalJustice #CivilRights #FreedomOfSpeech #ChantForChange #DemocracyInAction #CitizensUnite #JusticeForAll #PeacefulProtest #RiseForRights #VoicesOfChange

அக் 10, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

nagendhiran
அக் 10, 2026 20:33

தோற்றவர்களும் வெளிநாட்டு அந்நிய சக்திகளை கைக்கூலிகளால் நடத்தப்படும் போராட்டம் இது


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ