டில்லி பயங்கரம்... நேரில் பார்த்தவர்கள் திடுக் தகவல் delhi car blast | delhi red fort | delhi blast
டில்லி செங்கோட்டை மெட்ரோ ஸ்டேஷன் பக்கத்தில் இன்று மாலை 6:50 மணி அளவில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டு இருக்கிறது. இந்த பயங்கர சம்பவத்தில் 8 பேர் மரணம் அடைந்தனர். 24 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. கார் வெடித்து சிதறிய போது பக்கத்தில் இருந்த 8 கார்களும் தீப்பிடித்து கருகின. தெருவிளக்குகள் வெடித்து சிதறின. மிகவும் சக்தி வாய்ந்த வெடிப்பு என்று போலீசார் கூறினர். டில்லி அருகே பயங்கரவாதிகளிடம் இருந்து 5,400 கிலோ வெடிகுண்டுக்கான மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட சில மணி நேரத்தில் இந்த சம்பவம் நடத்ததால் இது பயங்கரவாதிகள் நடித்திய குண்டு வெடிப்பாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் தடய அறிவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்கள், என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். திட்டமிட்ட சதியா என்று ஆய்வு செய்கின்றனர். இதற்கிடையே சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பீதியில் உறைந்து போனார்கள். அவர்கள் கொடுத்த தகவல் நெஞ்சை உலுக்கிப்போட்டுள்ளது. ‛கார் வெடித்து சிதறியதும் ஒருவரின் கை மட்டும் துண்டாகி இந்த பகுதியில் கிடந்தது. அதை பார்த்து நான் பீதியில் உறைந்து போய்விட்டேன். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை என சம்பவ இடத்தில் இருந்த இளைஞர் கூறினார். சம்பவ இடத்துக்கு பக்கத்தில் வசிக்கும் ராஜ்தர் பாண்டே கூறுகையில், நான் பக்கத்தில் தான் வசிக்கிறேன். மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டது. இந்த பகுதியில் விண்ணை முட்டும் அளவு புகை மூட்டம் கிளம்பியது. உடனே என்ன நடக்கிறது என்று வெளியே வந்து பார்த்தேன் என்றார். சம்பவ இடத்தில் கடை வைத்திருக்கும் இளைஞர் உச்சக்கட்ட பீதியில் பேட்டி அளித்தார். ‛என் வாழ் நாளில் இதுவரை இப்படியொரு வெடி சத்தத்தை கேட்டது இல்லை. கார் வெடிப்பு நடந்த போது, அந்த சத்தத்திலேயே அதிர்ந்து போய் 3 முறை நான் தரையில் விழுந்தேன். நாம் எல்லோருமே சாகப்போகிறோம் என்று நான் நினைத்தேன் என்றார். #DelhiCarBlast #DelhiRedFort #DelhiBlast #DelhiTerroristAttack #DelhiRedFortCarBlast #UttarPradeshOnAlert #DelhiAlert #DelhiSecurity #TerrorismAwareness #NationalSecurity #CrimeAlert #CrisisResponse #SafetyMeasures #RecentEvents #BreakingNews #CityofDelhi #CrimeNews #EmergencyResponse #LiveUpdates #IndiaNews