டில்லி பயங்கரத்தில் கார் ஓனர் அதிரடி கைது-முக்கிய தகவல் delhi red fort car blast | delhi blast | NIA
டில்லி செங்கோட்டை மெட்ரோ ஸ்டேஷன் முதலாவது கேட் அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கிப்போட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே 8 பேர் உடல் சிதறி இறந்தனர். 20 பேர் பலத்த காயம் அடைந்தனர். பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. செங்கோட்டையில் கார் வெடித்து சிதறிய போது, பக்கத்தில் இருந்த கார், ஆட்டோக்களும் தீப்பற்றின. மொத்தம் 22 வாகனங்கள் சேதம் அடைந்தன. காஷ்மீர், உத்தரப்பிரதேசம், அரியானா மாநிலங்களில் அடுத்தடுத்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து டன் கணக்கில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் டில்லியில் கார் வெடித்து சிதறியது பல சந்தேகங்களை கிளப்பியது. இது பயங்கரவாத தாக்குதலாக தான் இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை கைப்பற்றி என்ஐஏ, தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். #DelhiCarBlast #DelhiRedFort #DelhiBlast #DelhiTerroristAttack #DelhiRedFortCarBlast #UttarPradeshOnAlert #DelhiAlert #DelhiSecurity #TerrorismAwareness #NationalSecurity #CrimeAlert #CrisisResponse #SafetyMeasures #RecentEvents #BreakingNews #CityofDelhi #CrimeNews #EmergencyResponse #LiveUpdates #IndiaNews