தேர்தல் கமிஷனில் புகார்: சூடுபிடிக்கும் டில்லி தேர்தல் களம் AAP BJP fight | Delhi Assembly election
அடுத்த மாதம் 5ம் தேதி டில்லி சட்டபை தேர்தல் நடக்க உள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதே சமயம், ஆளும் ஆம் ஆத்மி, பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ், பாஜ, ஆம் ஆத்மி என மூன்று கட்சிகளுமே வாக்காளர்களுக்கு பல்வேறு இலவசங்கள் வழங்குவதாக வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன. பாஜவும் காங்கிரசும் மறைமுக கூட்டணி அமைத்து ஆம் ஆத்மியை வீழ்த்த திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி பகிரங்க குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதித்திட்டம் நடப்பதாக, முதல்வர் ஆதிஷி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.