உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆம் ஆத்மியை எதிர்கொள்ள ஆர்எஸ்எஸ் உதவியை நாடிய பாஜ

ஆம் ஆத்மியை எதிர்கொள்ள ஆர்எஸ்எஸ் உதவியை நாடிய பாஜ

டெல்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. மொத்தம் 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ளது. மதுக்கொள்கை ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்தார். மக்கள் தீர்ப்புடன் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வர் ஆவேன் என சபதம் எடுத்துள்ளார். வேட்பாளர்களை அறிமுகம் செய்து இலவச அறிவிப்புகளை வெளியிட்டு முழு வீச்சில் தேர்தல் பணி செய்து வருகிறார். டெல்லியில் தொடர்ந்து 3 தேர்தல்களில் ஆம் ஆத்மி வென்ற நிலையில், தலைநகர் தங்களுக்கு கைகொடுக்காதது மத்தியில் ஆளும் பாஜவுக்கு பெரும் கவுரவ பிரச்னையாக உள்ளது.

ஜன 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை