மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் பக்..பக்.. | MHPFNL| Mylapore fund ltd| Devanathan
₹525 கோடி மோசடி புகார் சேர்மன் தேவநாதன் கைது! மொத்த பணமும் எங்கே? சென்னை மயிலாப்பூரில் 150 ஆண்டுகளாக தி மயிலாப்பூர் இந்து பர்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது இதன் தலைவராக தேவநாதன் யாதவ் இருக்கிறார். இந்த நிதி நிறுவனத்தில் 5 ஆயிரத்துக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் டெபாசிட் கணக்கு வைத்துள்ளனர். அதில் பெரும்பாலும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். முதலீடு செய்யும் பணத்துக்கு 10 முதல் 11 சதவீம் வரை வட்டி தருவதாக அறிவிக்கப்பட்டது. இதை நம்பி ஒவ்வொருவரும் பல லட்சங்களை முதலீடு செய்தனர். இதன் மூலம் நிதி நிறுவனத்திற்கு 525 கோடி ரூபாய்க்கு மேல் வைப்பு தொகை கிடைத்துள்ளது. முதலீடு செய்தவர்களுக்கு கடந்த ஆண்டு முதல் முதிர்வு தொகை, வட்டி பணம் முறையாக வழங்கப்படவில்லை. நிதி நிறுவனம் முறையாக பதில் அளிக்காததால் கடந்த ஜூன் 6ம் தேதி நிதி நிறுவனத்தை முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டனர். சாலை மறியல் செய்தனர். அதில் 140 பேர், பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். புகார்தாரர்களிடம் இருந்து 50 கோடிக்கு அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.