உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தாயின் பெயருடன் வெளியான பதவியேற்பு விழா அழைப்பிதழ்! Devendra Sarita Gangadharrao Fadnavis | Maharash

தாயின் பெயருடன் வெளியான பதவியேற்பு விழா அழைப்பிதழ்! Devendra Sarita Gangadharrao Fadnavis | Maharash

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜ தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றது. பாஜவை சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார். மும்பையில் நடக்கும் புதிய அரசின் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், பாஜ மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளைய பதவியேற்பு விழாவுக்கான அழைப்பிதழ், மகாராஷ்டிரா அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை செயலாளர் சுஜாதா சவுனிக் பெயரில் வெளியாகியிருக்கும் அதில், தேவேந்திர பட்னவிசின் பெயருடன் அவரது தாய், தந்தையரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அதாவது, மும்பை ஆசாத் மைதானத்தில் நாளை மாலை நடக்கும் புதிய அரசின் பதவியேற்பு விழா பிரதமர் மோடி முன்னிலையில் நடக்கும். அதில் தேவேந்திர சரிதா கங்காதர்ராவ் பட்னவிஸ் முதல்வராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 2014 மற்றும் 2109களில் மகாராஷ்டிரா முதல்வராக பட்னவிஸ் பதவியேற்ற போது விழா அழைப்பிதழில், தேவேந்திர கங்காதர்ராவ் பட்னவிஸ் என மட்டுமே பெயர் அச்சிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இம்முறை பட்னவிசின் தாய் சரிதாவின் பெயரும் விழா அழைப்பிதழில் இடம் பெற்றுள்ளது. தேவேந்திர பட்னவிசின் தந்தை பெயர் கங்காதர்ராவ், தாய் சரிதா. இளம் வயதிலேயே தந்தையை இழந்த பட்னவிசை, தாய் சரிதா மிகவும் கண்ணும் கருத்துமாக வளர்த்தார்.

டிச 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை