தீபம் விவகாரத்தில் மக்கள் கொதிப்பு; மலைகோயிலுக்கு செல்ல அனுமதி Tirupparankundram| deepam
திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதனால் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக மலை மீது ஏற யாருக்கும் அனுமதி தராமல் அரசு தடை போட்டது. இச்சூழலில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிங்கந்தர் தர்காவில் சந்தனகூடு விழாவுக்கு அரசு அனுமதி அளித்தது. போலீசார் பாதுகாப்புடன் நேற்று மலை மீது உள்ள தர்காவுக்கு கொடிமரம் கொண்டு செல்லப்பட்டு கொடியேற்றப்பட்டது. கொதிப்படைந்த உள்ளூர் மக்கள் மலை அடிவாரத்தில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்காவின் சந்தனகூடு விழாவுக்கு அனுமதி அளித்தது போல், தூபத்தூணில் தீபம் ஏற்றவும் அனுமதிக்க வேண்டும் என கையில் தீபத்துடன் பெண்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். மாலையில் மீண்டும் பெண்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். தர்காவில் கொடியேற்றுவது போல், எங்களை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திமுக அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவதாக உள்ளூர் மக்கள் கொதிப்படைந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு மட்டும் பக்தர்கள் செலல இன்று அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு செல்பவர்கள் ஆதார் கார்டு, செல்போன் எண், முகவரியை போலீசாரிடம் பதிவு செய்து விட்டு செல்ல வேண்டும் என பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. #Thiruparankundram #HillTemple #RestrictionsToDevotees #GovtGivesPermission #Permission