சங்கர் ஜிவால் இடத்தில் பொறுப்பு டிஜிபி? | DGP Shankar jiwal retired | New in charge DGP | TN govt p
தமிழக சட்டம் ஒழுங்கு போலீஸ் டிஜிபியாக உத்தராகண்டை சேர்ந்த சங்கர் ஜிவால் 2023 ஜூன் 30ல் பதவியேற்றார். அவருடைய பதவிக்காலம் வரும் 31ம் தேதியுடன் முடிவதால் அன்று முதல் புதிய டிஜிபி பொறுப்பேற்க வேண்டும். புதிய டிஜிபியை தேர்வு செய்ய 10 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியலை மத்திய அரசுக்கு மாநில அரசு அனுப்ப வேண்டும். அதில் பொருத்தமான மூன்று பேரின் பெயர்களை தேர்ந்தெடுத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுப்பி வைக்கும். அதில் ஒருவரை மாநில அரசு டிஜிபியாக நியமனம் செய்யும். தமிழக அரசு அண்மையில் இந்த பட்டியலை அனுப்பி வைத்த நிலையில், மத்திய அரசிடம் இருந்து பரிந்துரை பட்டியல் இன்னமும் வரவில்லை என கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி புதிய டிஜிபியாக சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், வன்னியப் பெருமாள், மகேஷ்குமார் அகர்வால், ஜி.வெங்கட்ராமன், வினித் வாங்கடே மற்றும் சஞ்சய் மாத்தூர் ஆகியோர் பட்டியில் இடம் பெற தகுதி பெற்றவர்கள். ஆனால் பரிந்துரை பட்டியல் கிடைக்காததால் தற்காலிக டிஜிபியை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி தற்போது டி.ஜி.பி அலுவலகத்தில், நிர்வாகப்பிரிவு டி.ஜி.பியாக பணியாற்றும் வெங்கட்ராமன், பொறுப்பு டி.ஜி.பியாக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 1994ம் ஆண்டு ஐ.பி.எஸ்., அதிகாரியான, இவர் சைபர் குற்றப்பிரிவு உட்பட, பல பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெங்கட்ராமன் 1968ல் நாகப்பட்டினத்தில் பிறந்தவர். பி.ஏ எகனாமிக்ஸ், எம்.ஏ பொது நிர்வாகம் படித்த வெங்கட்ராமன், யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழக கேடரில் 1994ல் ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வானார். சிபிசிஐடி கூடுதல் டிஜிபி உள்ளிட்ட பொறுப்புகளிலும் பணியாற்றியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் வரும் 30ம் தேதி வெளிநாடு செல்வதால், அதற்கு முன்னதாக அதாவது நாளைபுதிய டி.ஜி.பி பதவி ஏற்பார் என கூறப்படுகிறது. #DGPShankarJiwal #RetiredDGP #NewInChargeDGP #TNGovtPlan #PoliceReform #LeadershipChange #PublicSafety #TamilNaduPolice #LawEnforcement #CommunitySafety #NewBeginnings #DGPAnnouncement #MonitoringSafety #StateSecurity #CrimePrevention #OfficialAnnouncement #TNSecurity #GovernmentUpdates #PeaceAndOrder #DGPLeadership