/ தினமலர் டிவி
/ பொது
/ இலங்கையில் நடந்த திடுக்கிடும் சம்பவம் | Sri Lankan cricketer | former captain | Dhammika Niroshana
இலங்கையில் நடந்த திடுக்கிடும் சம்பவம் | Sri Lankan cricketer | former captain | Dhammika Niroshana
மனைவி குழந்தைகள் கண் எதிரே சுடப்பட்ட மாஜி கிரிக்கெட் வீரர்! இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தமிகா நிரோஷனா அம்பலங்கொடையில் அவரது வீட்டின் முன்பு சுட்டுக்கொல்லப்பட்டார். அவருக்கு வயது 41. மனைவி, 2 குழந்தைகள் கண்எதிரே நிரோஷனா அவர் சுடப்பட்டுள்ளார். அவரை சுட்டவர்கள் யார்? என்ன காரணம் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். கேங் போட்டியின் காரணமாக துப்பாக்கிசூடு நடந்திருக்கலாம் என்றும், இதில் தொடர்புடைய சந்தேக நபரை பிடித்து விசாரிக்க உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். 2000ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இலங்கை கிரிக்கெட் அணியில் அறிமுகமானார் நிரோஷனா. ஒரு சில ஆட்டங்களில் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
ஜூலை 17, 2024