குழந்தையை பார்க்க லஞ்சம்? தர்மபுரி ஆஸ்பிடலில் அடிதடி | Dharmapuri | Dharmapuri Hospital
தர்மபுரி மாவட்டம் பாளையம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி, வயது 30. இவரது மனைவி கோதாவரி. பிரசாவத்துக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருந்தார். சில நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. சின்னசாமி தனது குழந்தையை பார்க்க வரும்போது எல்லாம் மருத்துவமனை செக்யூரிட்டிகள் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அவரும் பணம் கொடுத்து வந்ததாக சொல்கிறார். இதுவரை 3 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளேன் என்றார். வழக்கம் போல மருத்துவமனைக்கு வந்த சின்னசாமி மனைவியை டிஸ்சார்ஜ் செய்ய சென்றுள்ளார். அப்போது செக்யூரிட்டிகள் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. கையில் பணம் இல்லை. ஏடிஎம் சென்று எடுத்து வருகிறேன் என கூறி இருக்கிறார். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி கை கலப்பானது. செக்யூரிட்டிகள் 2 பேர் ஒன்று சேர்ந்து மருத்துவமனை படியில் வைத்து சின்னசாமியை தாக்கியுள்ளனர்.