ஸ்டாலின் சொல்லும் விஷயம் புதிய கல்விக்கொள்கையில் இல்லை Dharmendra Pradhan Speech at Rajya Sabha
ராஜ்யசபாவில் புதிய கல்வி கொள்கை குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார். சுகாதாரத்துறை, மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலத்துறை, கல்வித்துறை என மூன்று தரப்பினரும் ஆலோசித்தே தேசிய கல்விக் கொள்கையை வடிவமைத்தோம். மாணவர் நலன் மற்றும் குழந்தைகளின் கற்றல் திறனை கருத்தில் கொண்டே புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் சிந்தனை திறனை ஆராய்ச்சி மனப்பான்மையை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நாட்டில் 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் உள்ளன. அனைத்து மொழிகளிலும் பாட புத்தகங்கள் அச்சடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மொழிகளுக்கும் அதற்கான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நாம் ஏன் பல மாெழிகள் படிக்க வேண்டும் என பலர் கேள்வி எழுப்புகின்றனர் நான் ஒடிசாவை சேர்ந்தவன். மொழியின் பெயரில் நாட்டின் சில பகுதிகளை இந்த அரசு பிரிக்க நினைப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடகாவை சேர்ந்தவர். அங்கு கன்னடம் பேசப்படுகிறது. ஒரு காலத்தில் ஐதராபாத்தும் அதனுடன் இணைந்திருந்தது. அங்கு தெலுங்கு, உருது, ஹிந்தி பேசப்படுகிறது. ஆங்கிலமும் பயன்பாட்டில் உள்ளது. அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதா? தாய்மொழியில் கல்வி