உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / லைவ் வீடியோவில் தெரிந்த குழந்தை: கரூர் துயரத்தில் இப்படியும் சோகம் | TVK rally in Karur

லைவ் வீடியோவில் தெரிந்த குழந்தை: கரூர் துயரத்தில் இப்படியும் சோகம் | TVK rally in Karur

கரூர் நெரிசலில் இறந்த 40 பேரில் 2 வயது குழந்தையும் அடக்கம். ஆஸ்பிடலில் அதன் உடலை தூக்கி செல்லும் தந்தை கதறிய காட்சிகள் காண்போரை உலுக்கியது. இதன் பின்னணியில் நடந்த சோகம் இப்போது வெளியாகி இருக்கிறது. சம்பவத்தன்று குழந்தையின் தந்தை விமல் வழக்கம் போல வேலையில் இருந்துள்ளார். அவரது அக்கா லல்லி விஜயை பார்க்கும் ஆர்வத்தில் கூட்டம் நடந்த இடத்துக்கு குழந்தையை தூக்கி சென்றுள்ளார். நெரிசலில் குழந்தை காணாமல் போனது. குடும்பத்தினர் அப்பகுதி முழுக்க தேடி உள்ளனர். அப்போது துயர சம்பவத்தை டீவியில் பார்த்த விமல், அதில் தனது குழந்தை தெரிவதை கண்டு ஆஸ்பிடல் சென்று மீட்டுள்ளார். #KarurTragedy #TVKRallyDeath #ToddlerDeathKarur #ParentsMournKarur #VijayRally #KarurStampede #TamilNaduTragedy #ChildLossKarur #JusticeForVictims #TVKStampede

செப் 29, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
அக் 01, 2025 13:16

குழந்தைகள் கொண்டு வரவேணாமென்று சொல்லியும் போயி.. சினிமாக்கள் மக்களை பிடித்து ஆட்டுகிறது.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !