ஆடி கார்னிவல் கொண்டாட்டத்தில் ஆடி மகிழ்ந்த அப்பார்ட்மென்ட்வாசிகள்! Dinamalar | Aadi Carnival Apartme
தினமலர் சார்பில் அப்பார்ட்மென்ட்டில் உள்ளவர்களை ஒன்றிணைத்து, ஆடி கார்னிவெல் - அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு கிரேஸ் சூப்பர் மார்க்கெட் நிறுவனம் டைட்டில் ஸ்பான்சராக உள்ளது. அதோடு இணைந்து, கிட்டீ பட்டீ கோ ஸ்பான்சராகவும், நிசான் ஆட்டோ ரிலே மற்றும் மயில் பிராண்ட் ஹோம் கேர் புரோடக்ட்ஸ் உள்ளிட்டவை, அசோசியேட் ஸ்பான்சராகவும் இந்த நிகழ்ச்சியை வழங்கி வருகின்றன. நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, சென்னையின் பல்வேறு அப்பார்ட்மென்ட்களில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், குன்றத்தூர் அருகே கொளப்பாக்கத்தில் உள்ள இஷா காயத்ரி அப்பார்ட்மென்டில் தினமலர் ஆடி கார்னிவெல் - அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. இதில், அப்பார்ட்மென்ட்வாசிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். காலை முதல் வளாகமே விழாக்கோலம் பூண்டது. காலையில் மகளிருக்கான சமையல் போட்டி நடந்தது. இதில் நெருப்பு, எண்ணெய் பயன்படுத்தாமல் பல்வேறு உணவுகளை சமைத்து அசத்தினர்.