உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முகவர்களின் கடின உழைப்புக்கு புகழாரம் சூட்டிய சிறப்பு விருந்தினர்கள்! Dinamalar | Agent Function

முகவர்களின் கடின உழைப்புக்கு புகழாரம் சூட்டிய சிறப்பு விருந்தினர்கள்! Dinamalar | Agent Function

மக்களின் நம்பிக்கையை சுமந்து, தமிழ் மனங்களிடம் நேர்மையான செய்திகளை கொண்டு செல்லும் உண்மையின் உரைகல், தினமலர் நாளிதழ் 75வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த வெற்றியின் பின்னணியில் உணர்வுபூர்வமாக கலந்து இருக்கும் தினமலர் முகவர்கள் பங்கேற்ற குடும்ப விழா புதுச்சேரி ஜெயராம் திருமண மண்டபத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. புதுச்சேரி தினமலர் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், தினமலர் இணை இயக்குநர் ஆர்.ஸ்ரீநிவாசன் ஆகியோர் முகவர்களுடன் இணைந்து குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர். விழாவில் தினமலர் நாளிதழின் பவள விழா ஆண்டு வெள்ளி நாணயத்தை, புதுச்சேரி வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன் வெளியிட, இணை இயக்குநர் ஆர்.ஸ்ரீநிவாசன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து நடந்த சிறப்பு அமர்வில், செல்வம் சேர்க்கலாம் வாங்க என்ற தலைப்பில் எழுத்தாளர் செல்வேந்திரனும், குடும்பத்தின் அழகு என்ற தலைப்பில் கல்வி ஆலோசகர் புகழேந்தியும் பேசினர். தினமலர் நாளிதழ் சந்தாவில் இணைந்தால் கிடைக்கும், 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்து யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன ஆலோசகர் புத்தன் விளக்கி கூறினார். விழாவில் பங்கேற்ற அனைத்து முகவர்களுக்கும் தினமலர் நாளிதழின் பவள விழா ஆண்டு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. தினமலர் நாளிதழை வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் முகவர்களின் கடின உழைப்புக்கு சிறப்பு விருந்தினர்கள் புகழாரம் சூட்டினர். #Dinamalar #AgentFunction #PlatinumJubilee #Pondicherry #PlatinumCelebration #AgentLife #DinamalarNews #PondicherryEvents #JubileeCelebration #CommunityEvent #Festivities #AnniversaryCelebration #IndianHeritage #PondicherryVibes #DinamalarUpdates #SpecialEvent #CulturalCelebration

செப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ