குட்டீஸ் முதல் சீனியர் சிட்டிசன் வரை உற்சாகம்! Dinamalar Apartment Kondattam | VGN Minerva Nolambur
தினமலர் அபார்ட்மென்ட் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியில் திளைத்த குடியிருப்புவாசிகள்! தினமலர் நாளிதழ் அடுக்குமாடி வீடுகளில் உள்ளவர்களை ஒன்றிணைத்து கார்னிவெல் அபார்ட்மென்ட் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, சென்னையில் பல்வேறு அடுக்குமாடி வீடுகளில் இந்த நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்படுகிறது. நிகழ்ச்சியை கிட்டீ பட்டீ பூர்விகா அப்ளையன்ஸ் மயில் மார்க் ஹோம் கேர் புரோடக்ட்ஸ் நாயுடு ஹால் போகா ஈவென்ட் ராஜா எலக்ட்ரிக் மற்றும் ஹார்டுவேர்ஸ் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. அந்த வகையில் சென்னை சின்ன நொளம்பூரில் உள்ள வி.ஜி.என் மினெர்வா அடுக்குமாடி வீடுகளில் கார்னிவெல் அபார்ட்மென்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் குடியிருப்பு பகுதியே திருவிழாக்கோலம் பூண்டது. குடியிருப்பு வாசிகள் உற்சாகத்தில் திளைத்தனர்.