உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தினமலர் அபார்ட்மென்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்-2024

தினமலர் அபார்ட்மென்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்-2024

தினமலர் அபார்ட்மென்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்-2024 | Dinamalar apartment cricket 2024 | Coimbatore | Apartment cricket | Dinamalar | தினமலர் நாளிதழ் சார்பில் அபார்ட்மென்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்-2024 போட்டிகள் செப்டம்பர் 22ல் தொடங்கியது. பெடரேசன் ஆப் கோயம்புத்துார் அபார்ட்மென்ட் அசோசியேசன்ஸ் இணைந்து நடத்திய இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. டென்னிஸ் பந்தில், நாக் அவுட் முறையில், 10 ஓவர் போட்டி நடத்தப்பட்டது. செப்டம்பர் 22, 29ம் தேதிகளில் சி.ஐ.டி., கல்லுாரி, இந்துஸ்தான் கல்லுாரி, என்.ஜி.பி., கல்லுாரி மைதானங்களில் போட்டிகள் நடந்தன. காலிறுதி போட்டிகளை தொடர்ந்து இன்று காளப்பட்டி ரோடு, என்.ஜி.பி., கல்லுாரி மைதானத்தில் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடந்தன. முதல் அரையிறுதியில், சரவணம்பட்டி செந்தில் கோல்டன் கேட் அணியும், நேரு நகர் ரெயின்டிராப் சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ரெயின் டிராப் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. பேட்டிங் செய்த செந்தில் கோல்டன் கேட் அணியினர், 10 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன் குவித்தனர்.

அக் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ