டாப் 3 கோலங்களுக்கு கிடைத்த மெகா பரிசால் பெண்கள் உற்சாகம் | Dinamalar Kolappotti | Top 3 Mega Prize
புதுச்சேரி தினமலர் நாளிதழ், சுற்றுலா துறை, ருசி பால் நிறுவனம், மார்டின் குழுமத்துடன் இணைந்து நடத்திய மெகா கோலப்போட்டி கடற்கரை சாலையில் நேற்று பிரம்மாண்டமாக நடந்தது. போட்டி காலை 6 மணிக்கு தொடங்கும் என அறிவித்திருந்தாலும் அதிகாலை 4 மணி முதலே போட்டியில் பங்கேற்கும் பெண்கள் குடும்பத்துடன் குவிய தொடங்கினர். புள்ளி கோலம், ரங்கோலி, டிசைன் கோலம் என மூன்று பிரிவுகளாக நடந்த போட்டியில் 18 முதல் 65 வயதிற்கு உட்பட்ட புதுச்சேரி பெண்கள் கலந்து கொண்டனர். புள்ளி கோலத்தில் 300 பேர், ரங்கோலி, டிசைன் கோலத்தில் தலா 350 பேர் என மொத்தம் 1000 பெண்கள் இதற்காக முன்பதிவு செய்திருந்தனர். 6 மணிக்கு போட்டி தொடங்கியதும் தங்களுக்கென ஒதுக்கிய 4 அடிக்கு 4 அடி இடத்தில் வண்ணமயமான கோலங்களை வரைய தொடங்கினர். கொடுக்கப்பட்ட 1 மணி நேரத்தில் ஒவ்வொரு பிரிவிலும் வித விதமான, வித்தியாசமான கோலங்களை வரைந்து தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.