/ தினமலர் டிவி
/ பொது
/ உற்சாகமாக தொடங்கிய தினமலர் மெகா வினாடி வினா போட்டி | Dinamalar | Mega quiz competition
உற்சாகமாக தொடங்கிய தினமலர் மெகா வினாடி வினா போட்டி | Dinamalar | Mega quiz competition
தினமலர் பட்டம் இதழ் சார்பில், பதில் சொல்; பரிசு வெல் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான வினாடி -வினா போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. புதுச்சேரி பதிப்பு சார்பில் இந்த ஆண்டுக்கான மெகா வினாடி வினா போட்டி புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மொத்தம் 160 பள்ளிகளில் நடக்க உள்ளது. இதனை தினமலர் பட்டம் இதழுடன், புதுச்சேரி ஆச்சாரியா கல்வி நிறுவனமும் இணைந்து நடத்துகிறது. புதுச்சேரியில் முதல் பள்ளியாக தேங்காய்திட்டு ஆச்சாரியா பால சிக் ஷா மந்திரில் வினாடி வினாடி போட்டிக்கான தகுதி சுற்றாக முதல் நிலை தேர்வு நடந்தது.
ஆக 29, 2024