உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தினமலர் ஷாப்பிங் விழா ஆரம்பம்: ஆபர் மழை கொட்டுது | dinamalar shopping expo Coimbatore

தினமலர் ஷாப்பிங் விழா ஆரம்பம்: ஆபர் மழை கொட்டுது | dinamalar shopping expo Coimbatore

கோவை கொடிசியா வளாகத்தில் தினமலர் மற்றும் சத்யா நிறுவனம் சார்பில் நடத்தப்படும் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சி துவங்கியது. கோவை கலெக்டர் பவன்குமார் துவக்கி வைத்தார். தினமலர் வெளியீட்டாளர் ஆதிமூலம், தினமலர் இயக்குனர் லட்சுமிபதி உடன் இருந்தனர். அல்ட்ரா நிறுவனம், கோவை லட்சுமி, வுட் ஸ்பார்க், நியூ மென்ஸ், மற்றும் ஆல்பா பர்னிச்சர், பேபர், ஆகிய நிறுவனங்கள் கோ-ஸ்பான்ஸர்களாக கரம் கோர்த்தன. அரங்கில் 300க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் கண்ணை கவரும் வண்ணங்களில் பெரிய எல்.இ.டி டி.வி., க்கள், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், பாத்திரங்கள், மைக்ரோ ஓவன் என, இல்லத்தரசிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகள் இருந்தது. பீரோ, திரைச்சீலைகள், மசாலா பொருட்கள், குடை, வீட்டு அலங்காரப் பொருட்கள், எல்.இ.டி., விளக்குகள், எண்ணெய் இல்லாமல் பொறிக்க எந்திரம் என புது புது கருவிகள் காண்போரை கவர்ந்தது.

ஆக 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !