உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் குவிந்த மாணவர்கள் | Dinamalar vazhikatti |Chennai | +2 Students

தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் குவிந்த மாணவர்கள் | Dinamalar vazhikatti |Chennai | +2 Students

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், உயர் கல்வியில் சேர ஆலோசனை தரும் வகையில், தினமலர் நாளிதழ் சார்பில் வழிகாட்டி நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் வெள்ளியன்று துவங்கியது. கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழுமத்துடன் இணைந்து நடக்கும் இந்நிகழ்ச்சி 3 நாட்கள் நடக்கிறது. 2வது நாளான நேற்று காலை முதலே மாணவர்கள், தங்கள் பெற்றோர்களுடன் ஆர்வமாக குந்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழுமம், சென்னை சிவ் நாடார் பல்கலை, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி குழுமம், அமெட் பல்கலை, வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி உட்பட, 80க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவனங்கள் சார்பில் அமைந்துள்ள ஸ்டால்களை பார்வையிட்டு ஆலோசனை பெற்றனர்.

மார் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை