உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுரையில் தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி | Dinamalar | Engineering counselling

மதுரையில் தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி | Dinamalar | Engineering counselling

சாய்ஸ் பில்லிங் குழப்பம் தீர்ந்தது கல்லூரி தேர்வும் புரிந்தது மாணவர், பெற்றோர் மகிழ்ச்சி ஆண்டுதோறும் மாணவர்கள் நலன் கருதி தினமலர் பல்வேறு கல்வி நிகழ்ச்சிகளை நடத்துகிறது. அந்த வகையில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தினமலர், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி -2025 நிகழ்ச்சி மதுரை தல்லாகுளம் சுந்தரம் ஹாலில் இன்று நடந்தது. அண்ணா பல்கலை இன்ஜினியரிங் படிப்புகளுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த வழிகாட்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கற்பகம் இன்ஸ்டியூட் பிஆர்ஓ ஆதி பாண்டியன் அறிமுக உரை ஆற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மாணவர்கள் பெற்றுள்ள கட் ஆப் மதிப்பெண்ணுக்கு எந்த கல்லுாரியில் சேரும் வாய்ப்பு கிடைக்கும், ஆன்லைன் கவுன்சிலிங்கில் அறிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள் என்ன, சிறந்த கல்லுாரியை தேர்வு செய்வது எப்படி, கவுன்சிலிங்கில் புதிய மாற்றங்கள் என்ன, சரியான சாய்ஸ் பில்லிங் உட்பட தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் அதிகாரிகள், நிபுணர்கள் விளக்கம் அளித்தனர். குறிப்பாக வாய்ப்பு மிகுந்த இன்ஜினியரிங் பிரிவுகள் என்ற தலைப்பில் கல்வி ஆலோசகர் அஸ்வினும், ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த தகவல்கள் என்ற தலைப்பில் திருச்சி அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் காளிதாசும் விளக்கம் அளித்தனர்.

ஜூலை 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை