வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஸ்ரீஹரியே சர்வ உத்தமன். அவனது அடிமையான வாயு பகவான்தான் எல்லா ஜீவர்களிலும் உத்தமன். ஒரே ஒரு ஸ்ரீஹரிதான் பகவான். ஒப்பாரும் மிக்காரும் இலன். பரதன் பெரிய ஆளாக இருக்கலாம். ஸ்ரீஹரியின் பத்னி ஸ்ரீமஹாலட்சுமி கூட பகவானுக்கு சமம் இல்லை. நம்மைப் போலல்லாமல் பகவானுக்கும் அவன் பத்னிக்கும் பஞ்ச பூதங்களால் ஆனா உடல் இல்லை. நம் ஜீவன்களுக்கு பிராகிருத தேகம் கொடுத்தது பகவானின் ஆணைப்படி ப்ரஹ்ம தேவன்தான். ப்ரஹ்மன்கூட ஒரு ஜீவன்தான். இதெல்லாம் தெரியாமல் பக்தர்கள் மனதில் பொய்களை பரப்புவதை விட பெரிய பாவம் எதுவுமில்லை. ஸம்ஸ்க்ருதத்தை நன்கு இலக்கணப் பிழை இல்லாமல் கற்றுத் தேர்ந்து, வேதங்களின் உண்மையான அர்த்தம் தெரிந்து பேசவும். ஒவ்வொரு விஷயத்தையும் பிரத்யக்சம் , அனுமானம் மற்றும் ஆகமம் இவை மூன்றின் அடிப்படையில் ஆராய்ந்து பிறகு தெளிந்து வெளியிடவேண்டும் .