உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தினமலரால் ஒரே நாளில் மாறிய குழந்தைகளின் வாழ்வு | Dinamalar | Tiruppur | School

தினமலரால் ஒரே நாளில் மாறிய குழந்தைகளின் வாழ்வு | Dinamalar | Tiruppur | School

திருப்பூர் பல்லடத்தை அடுத்த அறிவொளி நகரில் நரிக்குறவர் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 140 குடும்பத்தினர் வசிக்கின்றனர். எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. இங்குள்ள 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளி செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதுகுறித்து விசாரித்தபோது நரிக்குறவர் குடும்பத்தினர் உணர்ச்சிவசப்பட்டு பேசினர். 25 ஆண்டுக்கும் மேலாக இந்த பகுதியில் வசிக்கிறோம். பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை எங்களுக்கு பட்டா கிடைக்கவில்லை. 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வரும் குடிநீர் சுகாதாரமின்றி புழு பூச்சிகளுடன் சப்ளை செய்யப்படுகிறது. கழிப்பிடம் இங்கில்லை. திறந்த வெளியை பயன்படுத்தி வரும் அவலம் நீடிக்கிறது. குடியிருப்புகள் சேதமடைந்து மழை நீருடன் விஷ ஜந்துக்களும் வீட்டிற்குள் படையெடுக்கின்றன. நிறைந்து கிடக்கும் சாக்கடை கால்வாய், குவிந்து கிடக்கும் குப்பைகள் என கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுப்புழுக்கள் அதிகரித்து குழந்தைகள் பலர் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

நவ 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ