உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ₹1000க்கு டீல் பேசி துப்பாக்கியுடன் வேட்டை! | Dindigul | Forest Officers | Investigation

₹1000க்கு டீல் பேசி துப்பாக்கியுடன் வேட்டை! | Dindigul | Forest Officers | Investigation

திண்டுக்கல் வீர சின்னம்பட்டியை சேர்ந்த கேட்டரிங் மாஸ்டர் ராஜாராம். இவருக்கு சொந்தமாக மாந்தோப்பு உள்ளது. இதில் சில தினங்களாக குரங்குகள் புகுந்துள்ளது. தவசிமேடையை சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி ஜெயமணியை அழைத்த ராஜாராம் குரங்குகளை கொல்ல டீல் பேசி உள்ளார். இதற்காக அவருக்கு 1000 ரூபாய் கொடுத்து உள்ளார். சம்மதித்த ஜெயமணி தன்னிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியால் குரங்கை சுட்டு கொன்றார். துப்பாக்கியுடன் குரங்கு வேட்டை நடப்பதாக வன அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் சென்றது. சிறுமலை வன அலுவலர் மதிவாணன் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர். கள்ள துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த 2 பேரையும் பிடித்து வன அதிகாரிகள் விசாரித்தனர். குரங்குகளை வேட்டையாடி பின் இருவரும் சமைத்து சாப்பிட்டது தெரிய வந்தது. 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து குரங்கு தோல், நாட்டு துப்பாக்கி, வெடி மருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

மார் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை