அமைச்சர் விழாவால் மக்கள் அனுபவித்த அவஸ்தை | Dindigul | Minister Periyasamy
மயக்கம் வர மாதிரி இருக்கு சாமி கஞ்சிக்கு கூட வழியில்ல இப்போ! திண்டுக்கல் காமராஜர் பஸ் ஸ்டாண்டில் புதிதாக வாங்கப்பட்ட 53 பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அமைச்சர் பெரியசாமி தொடக்கி வைக்கும் வரை மற்ற பஸ்களுக்கு பஸ் ஸ்டாண்ட் உள்ளே அனுமதி இல்லை என அதிகாரிகள் கூறினர். இதனால் ஏற்கனவே இயக்கப்படும் பஸ்கள் ரோட்டில் இடம் கிடைக்கும் பகுதியில் நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றப்பட்டனர். பஸ் நிற்கும் இடம் தெரியாமல் வயதானவர்கள் சிரமப்பட்டனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். போக வேண்டிய பஸ் எங்கே நிற்கிறது என்பதை கண்டுபிடிக்க பஸ் ஸ்டாண்ட் முழுவதும் சுற்றிவரும் நிலை ஏற்பட்டது.
ஆக 21, 2024