உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 3 பள்ளி சிறுவர்களுக்கு நடந்தது என்ன? Dindigul | School Students | Police

3 பள்ளி சிறுவர்களுக்கு நடந்தது என்ன? Dindigul | School Students | Police

திண்டுக்கல் ​மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அடுத்த எஸ்.வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் நிஷ்வந்த் வயது 13, தருண் வயது 8, சபரி வயது 9. இவர்கள் மூவரும் அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தனர். இன்று காலை பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றனர். மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பல இடங்களிலும் தேடினர். அப்பகுதியில் உள்ள குளத்தின் கரையில் சிறுவர்களின் சைக்கிள்கள், காலணிகள் கிடந்துள்ளன. பெற்றோர் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து குளத்தில் இறங்கி தேடிய போது மூன்று சிறுவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில், மூவரும் பள்ளிக்கு செல்லாமல் குளத்தில் இறங்கி விளையாடிய போது இந்த விபரீத சம்பவம் நடந்தது தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர். #DindigulNews #Reddiyarchatram #TragicIncident #ThreeBoysDrowned #TamilNaduNews #DrowningTragedy #DindigulFireService #DinamalarNews

நவ 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை