காதலன் சுட்டது ஏன்? வெளியான பரபரப்பு தகவல் | Dindigul Gun shoot | Dindigul
நெஞ்சில் பாய்ந்த குண்டு சிறுமி மீது துப்பாக்கி சூடு! திண்டுக்கல் அருகே அதிர்ச்சி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள வெள்ளைமலைப்பட்டியை சேர்ந்தவர் செல்லம், வயது 19. சித்தப்பா வீட்டுக்கு அடிக்கடி செல்லம் செல்வான். அப்போது, 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி சிறுமியை சந்தித்து பேசினான். இன்றும் சித்தப்பா வீட்டுக்கு போன செல்லம் அந்த சிறுமியுடன் பேசிக்கொண்டிருந்தான். அப்போது, இன்னொரு பெண்ணுடன் செல்லம் பழகி வந்தது பற்றி சிறுமி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் செல்லத்துக்கும் சிறுமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த செல்லம் சித்தப்பா வீட்டுக்குள் சென்று ஏர்கன்னை எடுத்து வந்து சிறுமியை நோக்கி சுட்டான். இதில் அவரது நெஞ்சில் குண்டு பட்டு காயம் ஏற்பட்டது. துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். இதனை அறிந்த செல்லம் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றான்.