உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிரைவர் உட்பட 5 பேரிடம் விசாரணை! பின்ணணி என்ன? | Dindigul | Investigation |

டிரைவர் உட்பட 5 பேரிடம் விசாரணை! பின்ணணி என்ன? | Dindigul | Investigation |

திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் முருகன், வயது 58. திமுக பிரமுகரான இவர், திண்டுக்கல் மாநகராட்சியில் ஒப்பந்ததாரராக உள்ளார். இன்று மாலை நத்தம் அருகே ஜோத்தாம்பட்டி குட்டு பகுதியில் முருகனின் ஸ்கார்பியோ கார் கேட்பாரின்றி நின்றுள்ளது. அப்பகுதியினர் அருகே சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் முருகன் படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த சாணார்பட்டி போலீசார் முருகன் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தடயங்களை கைப்பற்றினர். முதல் கட்ட விசாரணையில் திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள காளியம்மன் கோயில் வரவு செலவு கணக்கில் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இவருக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஜூலை 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி