உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ₹11.5 கோடி விவகாரம்... ED-க்கு விழுந்த அதிரடி தடை director shankar ed case | Enthiran ed case | ED

₹11.5 கோடி விவகாரம்... ED-க்கு விழுந்த அதிரடி தடை director shankar ed case | Enthiran ed case | ED

ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் எந்திரன் என்ற படத்தை ஷங்கர் இயக்கினார். 2010ல் வெளியான இந்த படம் 290 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. இந்த படத்தின் கதை என்னுடையது என்று கூறி ஷங்கருக்கு எதிராக சென்னை எக்மோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார் ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர். ‛நான் 1996ல் இனிய உதயம் என்ற பத்திரிகையில், ஜூகிபா என்ற கதையை எழுதினேன். இக்கதையை திருடித்தான், எந்திரன் படத்தை எடுத்துள்ளார் ஷங்கர். அவர் மீது காப்புரிமை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கிடையே அமலாக்கத்துறை விசாரணையை ஆரம்பித்தது. ஜூகிபா கதைக்கும் எந்திரன் படத்துக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். எனவே ஷங்கர் காப்புரிமை சட்டத்தை மீறியதாக முடிவு செய்தனர். கதை வேறு ஒருவருடையதாக இருக்கும் போது, கதைக்காக மட்டுமே ஷங்கர் 11.50 கோடி ரூபாய் சம்பளம் பெற்றது சட்ட மீறல் என்று கருதினர்.

மார் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !