போலி வெப்சைட்டுகளை கண்டு ஏமாந்து போகாதீர் | District industries centre
பணம் போனா வராது போலி அரசு வெப்சைட்கள் உஷாரா இருங்க மக்களே! கோவை மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். தொழிலில் எப்படியாவது முன்னுக்கு வந்து விட துடிக்கும், சிறு குறு தொழில் முனைவோரை குறி வைத்து சமீப காலமாாக சைபர் கிரைம் நிதி மோசடிகள் அதிகமாக நடைபெறுகிறது. சிறு குறு நிறுவனங்கள் தொடங்கும் வழிமுறைகள்; கடன் மற்றும் மானியம் வேண்டுமா? என்பது போல, எஸ்எம்எஸ் அனுப்பி ஆள் பிடிக்கிறார்கள். நம்பி போன் செய்தால், சாமர்த்தியமாக பேசி வலையில் விழ வைப்பர்.
நவ 20, 2024