புயல் வலுவிழந்தாலும் மழை தொடர்வதால் முன்னெச்சரிக்கை Ditwah cyclone|Chennai Rain| School leave
தென்மேற்கு வங்க கடலில் உருவான டிட்வா புயல் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னை அருகே நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை 3ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதே போல், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டு உள்ளது. கனமழை எச்சரிக்கையால் புதுச்சேரியில் நாளை 3ம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.