உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி உத்தரவு | Diwali | Firecraker | 2 Hours allowed | PollutionContro

மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி உத்தரவு | Diwali | Firecraker | 2 Hours allowed | PollutionContro

தீபாவளி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து தரப்பு மக்களின் நினைவுக்கும் வருவது பட்டாசுகள் தான். என்னதான் புத்தாடை, இனிப்பு பலகாரங்கள், புது படங்களின் ரிலீஸ் என எல்லாம் இருந்தாலும், பட்டாசுகள் வெடிக்கவில்லை என்றால் தீபாவளி பண்டிகை நிறைவு தராது. தீபாவளிக்கு முதல் நாள் இரவில் இருந்தே பட்டாசுகளை வெடிக்க துவங்கி விடுவார்கள். காலத்துக்கு ஏற்றார்போல், பட்டாசுகளும் விதவிதமாக விற்பனைக்கு வருகின்றன. இந்த சூழலில் தீபாவளி நாள் முழுவதும் வெடிக்கப்படும் பட்டாசுகளால் சுற்றுச்சூழல் மாசடைந்து அதிக பாதிப்பு வருவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட் பட்டாசு வெடிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, மாநில அரசுகளும் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்திலும் பட்டாசுகள் வெடிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வருகிற 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா? என பொதுமக்கள் ஆவலோடு காத்திருந்தனர். இந்த சூழலில், வழக்கம்போல பட்டாசு வெடிப்பதற்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேர கட்டுப்பாடு விதித்துள்ளது. தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்பதே அந்த கட்டுப்பாடு. காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.

அக் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை