உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேமுதிக மவுனத்தின் பின்னணியில் மெகா பேரம் | DMDK | ADMK | DMK | Election 2026

தேமுதிக மவுனத்தின் பின்னணியில் மெகா பேரம் | DMDK | ADMK | DMK | Election 2026

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது. ஏற்கனவே உள்ள கூட்டணியை இன்னும் பலப்படுத்த திமுக திட்டமிட்டுள்ளது. கூட்டணிக்குள் தேமுதிக பாமகவை இழுக்க ரகசிய பேச்சு நடந்து வருகிறது. தி.மு.க., கூட்டணியில் இணைய வேண்டும் என்றால், 14 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் உறுதிப்படுத்த வேண்டும் என தே.மு.தி.க., நிபந்தனை விதித்துள்ளது. இதேபோல், அ.தி.மு.க., கூட்டணியில் இணைய வேண்டும் என்றால், 23 சட்டசபை தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் தர வேண்டும் என, தே.மு.தி.க., பிடிவாதம் பிடிக்கிறது. தற்போதைய நிலையில், இரண்டு கூட்டணிக்கும் கதவை திறந்து வைத்து, தே.மு.தி.க., காத்திருக்கிறது. அதேநேரம் கூட்டணி அறிவிப்பை, ஜனவரி 9ல் கடலுாரில் நடக்கும் மாநாட்டில்தான் வெளியிடுவோம் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தேமுதிக வந்தால் பார்ப்போம் என்ற மனநிலைக்கு தி.மு.க, அ.தி.மு.க., தலைமை வந்துவிட்டது. இப்படி தேமுதிக அடம் பிடிப்பதுக்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது என்கின்றனர் அக்கட்சியினர்.

ஜூலை 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி