தமிழகம் வந்ததும் பல அதிரடி இருக்கு: அமித் ஷா சர்பிரைஸ் | DMDK | PMK | BJP | Amit Shah
தமிழகத்தில், 2026 சட்டசபை தேர்தலுக்காக, பலமான கூட்டணி அமைக்கும் நடவடிக்கையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டுள்ளார். கடந்த முறை தமிழகம் வந்த போது அவரே அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, கடந்த ஏப்ரல், 11ல் சந்தித்து கூட்டணியை அறிவித்தார். அப்போத பா.ம.க, தே.மு.தி.கவை கூட்டணிக்குள் சேர்த்து, ஒவ்வொரு மாவட்டமாக கூட்டம் நடத்த அமித் ஷா திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தால், அமித் ஷா பயணங்களில் மாற்றங்கள் ஏற்பட்டன. ஜூன் இறுதிக்குள் அவரை கோவைக்கு அழைத்து வர, கட்சியினர் திட்டமிட்டனர். ஆனால், தென் மாவட்டங்களில் தேர்தல் பணிகளை வேகப்படுத்த, மதுரைக்கு வரவே அமித் ஷா விரும்பினார். அதற்கு ஏற்ப ஜூன் 8ல் மதுரை வரும் அமித் ஷா, தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்க உள்ளார். இந்த மாதமே தமிழகத்தில் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை இறுதி செய்து, வரும் செப்டம்பரில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.