உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நேரம் பார்த்து அடித்த திமுக; தேமுதிக சாய்ந்ததன் பின்னணி Dmdk| palanisamy| Bjp | Premalatha

நேரம் பார்த்து அடித்த திமுக; தேமுதிக சாய்ந்ததன் பின்னணி Dmdk| palanisamy| Bjp | Premalatha

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில், புதிய கட்சிகளை சேர்க்கும் பொறுப்பை, அதிமுக பொதுச்செயலர் பழனிசாமியிடம், பாஜ மேலிடம் ஒப்படைத்த நிலையில், தேமுதிகவை கோட்டை விட்டு விட்டதாக பாஜவினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து பாஜ வட்டாரங்கள் கூறும்போது, திமுக கூட்டணி பலமாக உள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட பல கட்சிகளை சேர்க்க, பாஜ முயற்சித்தது. தமிழக கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் பணியை, நாங்களே பார்த்து கொள்கிறோம் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பழனிசாமி தெரிவித்து இருந்தார். இதனால், இந்த விவகாரத்தில் தமிழக பாஜ தலைவர்கள் ஈடுபட வேண்டாம் என நிர்வாகிகளிடம் தெரிவித்து விட்டார் அமித் ஷா. தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி பேச்சு நடத்தியதில், பிரேமலதா வைத்த கோரிக்கைகளை பழனிசாமி ஏற்கவில்லை. இருந்தபோதும், மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், பிரேமலதாவிடம் பேச்சு நடத்த முயன்றார். ஆனால், அவரிடம் பேச, பிரேமலதா ஆர்வம் காட்டவில்லை. தேமுதிகவை கூட்டணியில் சேர்க்கும் பணியில் திமுக அமைச்சர்கள் வேலு, நேரு, முதல்வரின் குடும்ப உறுப்பினர் ஆகியோர் ஈடுபட்டனர். இதை அறிந்த பாஜ, தேமுதிகவின் கோரிக்கைகளுக்கு உத்தரவாதம் அளித்து, கூட்டணியில் சேர்க்கும்படி, பழனிசாமியை மீண்டும் அறிவுறுத்தியது. ஆனால், அவர் ஆர்வம் காட்டவில்லை.

பிப் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை