/ தினமலர் டிவி
/ பொது
/ மூத்த தலைவருக்கும் பொறுப்பு கொடுக்க திட்டம்! | DMK | udhayanidhi | Duraimuraugan
மூத்த தலைவருக்கும் பொறுப்பு கொடுக்க திட்டம்! | DMK | udhayanidhi | Duraimuraugan
2026 சட்டசபை தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்பு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் நேரு, வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்றனர். மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலர் என மொத்தம் 117 மாவட்ட செயலர்களை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதியின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப வேகமாக செயல்பட கூடியவர்களை மாவட்ட செயலர்களாக நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதியுடன் சேர்த்து, துரைமுருகனுக்கும் துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து கட்சி மேலிடம் ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
ஜூலை 22, 2024