திமுக-மார்க்சிஸ்ட் பேச்சு மீண்டும் தோல்வி Dmk | election | Marxist
திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது கடந்த முறை திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக சொல்கிறது இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது 10 மணி நேர ஆலோசனை நடத்தினர் 6 சீட் கேட்டு பெற முடிவு செய்தனர் இன்று முதல்வர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் மாநில செயலர் சண்முகம் சந்தித்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 சீட் மட்டுமே கொடுக்க முடியும் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம் தொகுதி பங்கீடு தொடர்பாக 4 முறை திமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி மார்க்சிஸ்ட் இறுதி முடிவை நாளைக்குள் தெரிவிப்பதாக ஸ்டாலினிடம் சண்முகம் தகவல்